இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ஆப்பிரிக்காவில் ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொலை: டிரம்ப்

ஐஎஸ்ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறித்து...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - AFP

Updated On :16 மே 2026, 11:12 am IST

அமெரிக்க நைஜீரியப் படைகளின் கூட்டு முயற்சியால் ஐஎஸ்ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்ததாவது:

எனது வழிகாட்டுதலின்படி, அமெரிக்கப் படைகளும் நைஜீரியாவின் ஆயுதப் படைகளும் இணைந்து உலகின் மிகவும் தீவிரமான பயங்கரவாதியைப் ஒழிப்பதற்காக, சிக்கலான ஒரு பணியைக் குறைபாடின்றி நிறைவேற்றின.

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலை தளபதியான அபு-பிலால் அல்-மினூகி, ஆப்பிரிக்காவில் தலைமறைவாகலாம் என்று நினைத்தார். ஆனால், அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை உளவாளிகள் எங்களுக்குத் தொடர்ந்து தகவல் அளித்து வந்தனர். அது அவருக்குத் தெரியவில்லை.

அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ, அல்லது அமெரிக்கர்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிடவோ முடியாது. அவர் கொலை செய்யப்பட்டதால், ஐஎஸ்ஐஎஸ்-ன் உலகளாவிய செயல்பாடு பெருமளவில் குறைந்துள்ளது. இந்த நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு நல்கிய நைஜீரிய அரசுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

US President Donald Trump has stated that Abu-Bilal al-Minuqi, a second-tier commander of ISIS, was killed through a joint effort by American and Nigerian forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.