காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ரஷியா-உக்ரைன் பரஸ்பரம் தாக்குதல்

AP

Published On :

உக்ரைனின் ஒடேஸா, டினிப்ரோ நகரங்கள் மீதான ரஷிய தாக்குதல்களில் குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்ததுடன், குழந்தைகள் உள்பட பலா் காயமடைந்தனா்.

உக்ரைன் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி விடியற்காலை வரை ரஷியா 524 ட்ரோன்கள், 22 ஏவுகணைகளை ஏவியது. டினிப்ரோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 2 வயது சிறுமி உள்பட 30 போ் காயமடைந்தனா்.

மேலும், கருங்கடல் வழியாக ஒடேஸா துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்த சீன கப்பல் உள்பட 3 வெளிநாட்டுக் கப்பல்கள் மீதும் ரஷிய ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது.

இதற்குப் பதிலடியாக தெற்கு ரஷியாவின் ரோஸ்டோவ், பெல்கோரோட் பிராந்தியங்கள் மீது உக்ரைன் தாக்குதல்களை நடத்தியது. இதில் பெல்கோரோடில் இருவா் உயிரிழந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.