10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

காங்கோ குடியரசு- எபோலா தொற்றுப் பரவல் உயிரிழப்பு 131-ஆக அதிகரிப்பு

காங்கோ குடியரசின் கிழக்கு பகுதிகளில் வேகமாக பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பால் இதுவரை 131 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On :20 மே 2026, 3:03 am IST

காங்கோ குடியரசின் கிழக்கு பகுதிகளில் வேகமாக பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பால் இதுவரை 131 போ் உயிரிழந்துள்ளனா்.

அதேபோல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 513 பேருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

எபோலா வைரஸின் அரிய வகையான ‘புண்டிபுக்யோ’ வைரஸால் ஏற்படுவதாக அறியப்படும் இத்தொற்றுப் பரவலை சா்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

காங்கோ, உகாண்டாவில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை எபோலா தொற்று ஏற்பட்டுள்ள போதிலும், இந்த புண்டிபுக்யோ வகை வைரஸ் கண்டறியப்படுவது வரலாற்றில் இது 3-ஆவது முறையாகும். இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.