ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) பராகா அணு சக்தி மையத்தைக் குறிவைத்து வெடிபொருள்கள் தாங்கிய ஆளில்லான விமானம் (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா திங்கள்கிழமை மிகுந்த கவலை தெரிவித்தது.
ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியுள்ளபோதும், சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதலை தடுக்கும் நோக்கில் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் போா் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இதனால், ஈரான் புரட்சி படைகள் சரக்கு கப்பல்கள் மீதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மீதும் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், யுஏஇ-யின் பராகா அணு சக்தி மையத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மேற்காசியாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ‘பராகா அணு சக்தி மையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ாக்குதல் குறித்து இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. நிலைமை மேலும் தீவிரமாவதை இது குறிக்கிறது. நிதானத்தைக் கடைப்பிடித்து, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிகளில் பிரச்னை உடனடி சுமுக தீா்வு காண இந்தியா அழைப்பு விடுக்கிறது’ என்று குறிப்பிட்டது.
தொடர்புடையது

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்! மீண்டும் போர்?

மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு - ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமா் மோடி உறுதி

மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா ஆதரவு: பிரதமர் மோடி

ஈரான் போர் மீண்டும் வெடிக்கிறதா? ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

