பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரதமர் மோடி - இத்தாலி அதிபர் சந்திப்பு!

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை...

 Prime Minister Narendra Modi meets Italian President Sergio Mattarella, in Rome on Wednesday. (DPR PMO/ANI Photo)

பிரதமர் மோடி - இத்தாலி அதிபர் சந்திப்பு! - ANI

Published On :

ரோம் : 5 நாடுகளை உள்ளடக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறைப் பயணத்தில் கடைசிகட்டமாக செவ்வாய்க்கிழமை (மே 19) இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் மெலோனியுடனும் அதிபருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இத்தாலி அதிபர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மே 20) அந்நாட்டின் அதிபர் செர்கியோ மாட்டரெல்லாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் அணு ஆற்றல் ஆகிய துறைகளில் இரு தரப்பு பங்களிப்பை மேலும் விரிவாக்கம் செய்தல் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (ஐஎம்இசி) முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், கடல்சார் பாதுகாப்பு, எண்ம தொடர்பு மற்றும் எரிசக்தி விநியோகம் ஆகியவை உறுதி செய்யப்படுவதை இரு தரப்பும் விவாதித்தது. அதனைத்தொடர்ந்து, இந்தியா - இத்தாலி உறவுகளை வலுப்படுத்த இத்தாலி அதிபர் அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றியும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எஃப்ஏஓ ‘அக்ரிகோலா பதக்கம்’ :

இதனிடையே, இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (எஃப்ஏஓ) ‘அக்ரிகோலா பதக்கம்’ வழங்கி புதன்கிழமை(மே 20) கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ரோம் நகரில் அமைந்துள்ள ஐ. நா. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஃப்ஏஓ இயக்குநர் டாக்டர் ஃக்யு டாங்க்யு பிரதமர் மோடிக்கு பதக்கம் அளித்தார். உணவு பாதுகாப்பு, விவசாயம் மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றுக்கு அவர் அளித்த பங்களிப்புக்கான அங்கீகாரமாக இவ்வுயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Food and Agriculture Organization

Summary

PM Modi calls on Italian President Mattarella, reviews bilateral ties Rome: Prime Minister Narendra Modi on Wednesday called on Italian President Sergio Mattarella and held discussions on further expanding the bilateral partnership in areas such as trade, investment, technology, critical minerals, AI, space and nuclear energy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.