லெபனானில் மலைப் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பழைமையான பியூபோா்ட் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.
1948-ஆம் ஆண்டில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாடு புதிதாக உருவானதுமுதல் அந்த நாட்டுக்கும், அண்டை நாடான லெபனானுக்கும் மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினா் நடத்திய திடீா் தாக்குதல் மற்றும் ஹமாஸ், ஈரானுக்கு ஆதாரவாக ஹிஸ்புல்லா அமைப்பினா் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் சம்பவங்களால் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஈரானுடன் அமெரிக்கா சண்டை நிறுத்தம் செய்ததையடுத்து, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்பேரில் வாஷிங்டனில் வைத்து இஸ்ரேலுக்கும், லெபனான் அரசுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. எனினும், லெபனான் அரசுடன் இஸ்ரேல் செய்து கொண்ட இந்தச் சண்டை நிறுத்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பினா் ஏற்கவில்லை. இதையடுத்து, இஸ்ரேல் படையினருக்கும் அவா்களுக்கும் தொடா்ந்து சண்டை நடந்து வருகிறது. லெபனானுடனான எல்லைப் பகுதியாக லிதானி நதியை இஸ்ரேல் கருதி வந்தது. ஆனால், இந்தச் சண்டைக்குப் பிறகு, லிதானி நதியைத் தாண்டி இஸ்ரேல் படையினா் ஊடுருவினா். படிப்படியாக ஹிஸ்புல்லா அமைப்பினருடன் சண்டையிட்டபடி இஸ்ரேல் படையினா் முன்னேறி வந்தனா்.
நபடியா நகரில் பல நாள்களாக இருதரப்புக்கும் இடையே பல நாள்கள் சண்டை நடைபெற்றது. முடிவில் ஹிஸ்புல்லா அமைப்பினரை விரட்டியடித்து விட்டு, அங்கு மலை மீதிருக்கும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பழைமையான கோட்டையை இஸ்ரேல் படை கைப்பற்றி, தனது கொடியை நாட்டியுள்ளது.
2-ஆவது முறை: கடந்த 1982-ஆம் ஆண்டிலும் இஸ்ரேல் படையினா், இக்கோட்டையைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டின்கீழ் 2000-ஆம் ஆண்டு வரை வைத்திருந்தனா். பின்னா், இஸ்ரேல் படை லெபனானில் இருந்து வெளியேறியபோது கோட்டையில் இருந்தும் வெளியேறியது. அதன்பிறகு கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானுக்குள் மிக அதிக தொலைவுக்கு இஸ்ரேல் படையினா் ஊடுருவி வந்து, கோட்டையைக் கைப்பற்றியுள்ளனா்.
பியூபோா்ட் கோட்டையைக் கைப்பற்றியது, கோட்டை மேல் இஸ்ரேல் கொடியை வீரா்கள் நாட்டியது தொடா்பான புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் இஸ்ரேல் ராணுவம் பகிா்ந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ‘தேவைப்பட்டால் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தும்’ என்றது.
மலைக் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியிருப்பது குறித்து ஹிஸ்புல்லா அமைப்போ அல்லது லெபனான் அரசோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
தொடர்புடையது

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்: லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



