ஸ்பெயினில் 69 பேர் பலியான ரயில் விபத்து: போக்குவரத்து அமைச்சர் ராஜிநாமா!
ஸ்பெயினில் 69 பேர் பலியான ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று போக்குவரத்து அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...

ஆஸ்கார் புவென்டே.
ஸ்பெயினில் நடந்த கோர ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலெடோவில், கடந்த வாரம் புதன்கிழமை (அக். 28) காலை மாட்ரிட் நகரத்தில் இருந்து செவில் நோக்கிச் சென்ற அதிவேக ரயில் ஒன்று நின்று கொண்டிருந்த மற்றொரு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அந்த ரயில்களில் பயணித்த சுமார் 69 பேர் பலியாகினர். சுமார் 200 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஸ்பெயினில் ஓராண்டில் நேரிட்ட இரண்டாவது ரயில் விபத்து சம்பவம் இதுவாகும். இந்த ரயில் விபத்துக்கு குறித்து ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆஸ்கார் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் இரண்டு கோர ரயில் விபத்துகள் நடந்த பின்னர், ஒரு நாட்டின் போக்குவரத்து அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது” என்று தெரிவித்து விபத்துக்குப் பொறுப்பேற்று, போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நவ. 29 அன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், வல்லாடோலிட் தொகுதியில் ஸ்பானிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி சார்பில் தான் தாக்கல் செய்த வேட்புமனுவையும் திரும்பப் பெறுவதாக ஆஸ்கார் புவென்டே உறுதிப்படுத்தியுள்ளார்.
Summary
Spain's Transport Minister Oscar Puente has resigned following a devastating high-speed train accident that killed 69 people near Urda on the line linking Madrid to Andalusia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

