ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் செயல்பட்ட குற்றச்சாட்டில் போராட்டக்காரர்கள் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்...

ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்... - கோப்புப் படம்
ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் ஈரானில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அரசுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு இன்று (நவ. 8) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஹசன் தியோபண்ட், ஹமீத் காசெமி மற்றும் ரெசா ஸன்கானே ஆகியோர் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் கராஜ் நகரத்திலுள்ள துணை மின் நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, ஈரானில் தொடர்ந்து ஏராளமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக மரண தண்டனை நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்துமாறு ஈரான் அரசுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
three individuals in Iran have been executed after being accused of carrying out attacks during anti-government protests.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


