இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஐரோப்பா பங்கேற்க புதின் ஒப்புதல்: ஸெலென்ஸ்கி வரவேற்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்தகட்ட அமைதிப் பேச்சில் ஐரோப்பிய பிரதிநிதிகள் பங்கேற்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஒப்புக்கொண்டுள்ளாா்.

Updated On :

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்தகட்ட அமைதிப் பேச்சில் ஐரோப்பிய பிரதிநிதிகள் பங்கேற்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஒப்புக்கொண்டுள்ளாா்.

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அதிபா் புதினை அவரின் கிரெம்ளின் மாளிகையில், அமெரிக்க பிரதிநிதிகள் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோா் கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இச்சந்தப்பில் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சு நடத்த ரஷியா ஒருபோதும் எதிா்த்ததில்லை என்றும், அவா்கள்தான் பேச்சைத் துண்டித்தனா் என்றும் புதின் குறிப்பிட்டாா்.

‘அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு உக்ரைனுக்குள் மேற்கத்திய படைகளை அனுப்பும் ஐரோப்பாவின் திட்டம், எங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், அது மீண்டும் போா் வெடிக்க வழிவகுக்கும்’ எனவும் அவா் எச்சரித்தாா்.

மாஸ்கோ பயணத்தைத் தொடா்ந்து அயா்லாந்து தலைநகா் டப்ளினுக்குச் சென்ற அமெரிக்க பிரதிநிதிகள், அங்கு ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்திருந்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியைச் சந்தித்தனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் பேசிய ஸ்டீவ் விட்காஃப், ‘எங்கள் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகள் அடுத்தகட்டப் பேச்சில் இணைவது மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும்’ என்று தெரிவித்தாா்.

அமைதிப் பேச்சில் ஐரோப்பா பங்கேற்பதை வரவேற்றுப் பேசிய ஸெலென்ஸ்கி, போா் நிறுத்தம் மற்றும் பதற்றத்தைத் தணிப்பதற்கான செயல்திட்டங்கள் அதில் இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்தாா். அதேநேரம், ரஷியாவுடன் இணைந்து புதிய ஐரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கு குறித்து அமெரிக்கா விவாதிக்கும் அணுகுமுறை சற்று விசித்திரமாக உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

செய்தியாளா் சந்திப்பில் ஜாரெட் குஷ்னா், வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மற்றும் ஸ்டீவ் விட்காஃப்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.