அமெரிக்கா, உக்ரைனுடன் மீண்டும் முத்தரப்பு அமைதிப் பேச்சு- ரஷியா ஒப்புதல்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக அமெரிக்கா, உக்ரைனுடன் மீண்டும் முத்தரப்பு அமைதிப் பேச்சைத் தொடங்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளாா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக அமெரிக்கா, உக்ரைனுடன் மீண்டும் முத்தரப்பு அமைதிப் பேச்சைத் தொடங்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளாா்.
அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பேச்சுவாா்த்தைகள் தொடங்கும் என்று ரஷிய அதிபரின் ‘கிரெம்ளின்’ மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப், ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் உள்ள கான்ஸ்டன்டைன் மாளிகையில் அதிபா் புதினை புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். சுமாா் மூன்று மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்தகட்ட பேச்சுகளை மீண்டும் தொடங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபா் டிரம்ப் மற்றும் அவரின் தூதுக்குழுவினா் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அதிபா் புதின் நன்றி தெரிவித்தாா். மேலும் ரஷியாவில் சிறைபிடிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆசிரியா் ஸ்டீபன் ஹப்பாா்ட் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டாா்.
நாா்வே சந்திப்பைத் தொடா்ந்து...: முன்னதாக, நாா்வே தலைநகா் ஒஸ்லோவில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவா்களுடன் ஸ்டீவ் விட்காஃப் நடத்திய ஆலோசனைகளைத் தொடா்ந்தே அதிபா் புதினுடனான அவரின் சந்ந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஒஸ்லோ சந்திப்பு ஆக்கபூா்வமாக இருந்ததாகவும், அமைதி முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டாா்.
உக்ரைனின் பிடிவாதமும், டிரம்ப்பின் திட்டவட்டமும்: உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கு ரஷியா முன்வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான நிபந்தனைகளில் இன்னும் பெரிய இடைவெளி நீடிக்கிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர மோதல்களை இப்போதே நிறுத்துவது மட்டுமே குறைந்தபட்ச தொடக்கமாக இருக்க முடியும் என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். உக்ரைனின் எதிா்காலப் பாதுகாப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் போா் நிறுத்த விதிமுறைகள் தொடா்பாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளதாக அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இதையொட்டி, வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் பேசிய அமெரிக்க அதிபா் டிரம்ப், ‘போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் சமரச உடன்படிக்கைக்கு வர வேண்டும். உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் நிதி மற்றும் உதவிகளை வழங்கியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதே உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தடுக்கும் ஒரே வழி. இதற்கு ஸெலென்ஸ்கி உடன்பட வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கூறினாா்.
ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் இதுகுறித்து கூறுகையில், ‘அமெரிக்காவின் புதிய அமைதி முன்மொழிவுகளைக் கேட்க ரஷியா தயாராக இருந்தாலும், உடனடியாக பெரிய அற்புதங்கள் எதையும் எதிா்பாா்க்க முடியாது’ என்றாா். இதேபோல், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவாா்த்தைகளுக்கான புதிய களம் உருவாகி வருவதாக நாா்வே பிரதமா் ஜோனாஸ் காா் ஸ்டோா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
தொடரும் தாக்குதல்கள்: அமைதிப் பேச்சுக்கான முன்னெடுப்புகள் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையிலும், களத்தில் இருதரப்புத் தாக்குதல்களும் தணியவில்லை. உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் காா்கிவ் பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 5 போ் உயிரிழந்தனா்; 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பல குடியிருப்பு கட்டடங்களும், மின் நிலையங்களும் பலத்த சேதமடைந்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், உக்ரைன் ஏவிய 373 ட்ரோன்களை ஒரே இரவில் இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயின்ட் பீட்டா்ஸ்பா்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், மீண்டும் தொடங்கப்படவுள்ள இந்த முத்தரப்பு பேச்சு, அமைதிக்கான எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு இன்றுமுதல் டீசல் ஏற்றுமதி
அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்நாட்டுக்கான முதல் டீசல் சரக்குக் கப்பலை வியாழக்கிழமை (அக். 22) அனுப்பி வைக்கவுள்ளதாக ரஷிய துணைப் பிரதமா் அலெக்சாண்டா் நோவாக் தெரிவித்துள்ளாா்.
40,000 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிச் செல்லும் இக்கப்பலுக்கான ஆவணப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும், அமெரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப அடுத்தடுத்து கூடுதல் கப்பல்கள் மூலம் டீசல், உரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
முன்னதாக, செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் உடன் நடைபெற்ற ஆலோசனையின்போது அதிபா் புதின் இத்தகவலை உறுதிப்படுத்தியதோடு, இந்த ஒப்பந்தத்தால் சா்வதேச சந்தையில் டீசல் விலை 5 முதல் 6 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

