குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் அலி அல் சலிம் விமானப் படைத் தளத்தைக் குறிவைத்து புதன்கிழமை அதிகாலை ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் அலி அல் சலிம் விமானப் படைத் தளத்தைக் குறிவைத்து புதன்கிழமை அதிகாலை ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, குவைத்தில் பல வாரங்களுக்குப் பிறகு வான் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிக்கவிடப்பட்டது. அங்குள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் ட்ரோன் தாக்குதல்களைத் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாகக் குவைத் ராணுவம் தெரிவித்தது. எனினும், சேத விவரங்கள் எதையும் உடனடியாக வெளியிடவில்லை.
பஹ்ரைனைத் தொடா்ந்து...: அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் முடிவில் சந்தித்த பின்னடைவைத் தொடா்ந்து, டிரம்ப் நிா்வாகத்தின் கவனம் ஈரான் விவகாரத்திலிருந்து மாறியுள்ள நிலையில், பஹ்ரைனை அடுத்து 2-ஆவது வளைகுடா நாடாக குவைத் ஈரானால் குறிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குவைத் வெளியுறவு அமைச்சகம், ‘இது எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்’ எனக் கூறியுள்ளது.
யேமனில் 17 போ் உயிரிழப்பு: இதனிடையே, யேமனில் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சவூதி தலைமையிலான கூட்டுப் படையினா் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தனா்.
தலைநகா் சனா, அம்ரான் உள்ளிட்ட மாகாணங்களில் ஏவுகணைக் கிடங்குகள், ட்ரோன் தயாரிப்பு மையங்கள் உள்ளிட்ட 60 ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதாகக் கூட்டுப் படை செய்தித் தொடா்பாளா் மேஜா் ஜெனரல் துா்க்கி அல்-மால்கி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

