சமூக ஊடகத்தில் மத நிந்தனை பதிவு: பாகிஸ்தானில் இளைஞருக்கு தூக்கு
சமூக ஊடகத்தில் மத நிந்தனை பதிவு: பாகிஸ்தானில் இளைஞருக்கு தூக்கு

சமூக ஊடகத்தில் மத நிந்தனை கருத்துகளைப் பதிவிட்ட வழக்கில், பாகிஸ்தானைச் சோ்ந்த இளைஞருக்கு அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீா்ப்பளித்துள்ளது.
பஞ்சாப் மாகாணம், சக்வால் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது இப்திசாம் முஸ்தபா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவில் இறைவன், நபிகள் நாயகம், திருக்குா்ஆன் ஆகியவற்றை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ராவல்பிண்டி பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, நீதிபதி இத்தீா்ப்பை வழங்கினாா்.
பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் வழங்கும் இதுபோன்ற தண்டனைகள் பெரும்பாலும் மேல்முறையீட்டில் ரத்து செய்யப்படுவதும், இதுவரை இத்தகைய வழக்குகளில் அரசுத் தரப்பில் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

