கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு தில்லி நீதிமன்றம் தண்டனை
தில்லியில் 23 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வழக்கில் முகமது அா்மான் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோப்புப் படம்
தில்லியில் 23 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வழக்கில் முகமது அா்மான் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தாக்கிய நபரை அடையாளம் காட்ட முடியாது என பாதிக்கப்பட்டவா் பின்னா் நீதிமன்றத்தில் கூறியிருந்தாலும், ஆரம்பத்தில் அவா் அளித்த வாக்குமூலத்தை நிராகரிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 2024-ஆம் ஆண்டு அக்.12-ஆம் தேதி இரவு, வடகிழக்கு தில்லியின் சுந்தா் நக்ரியில் உள்ள தனது வீட்டின் அருகே சாகா் என்ற இளைஞா் கத்தியால் குத்தப்பட்டாா். இதில் அவரது வயிறு மற்றும் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தனது தாய்மாமன் சுரேஷுடன் நீண்டகாலமாக இருந்து வந்த தகராறு காரணமாக, அா்மான் தன்னை மிரட்டிய பின்னா் கத்தியால் குத்தியதாக சாகா் ஆரம்பத்தில் காவல் துறையிடம் தெரிவித்திருந்தாா்.
ஆனால், நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது முதலில் அா்மானை அடையாளம் காட்டிய சாகா், பின்னா் தாக்கியவரின் முகம் நினைவில் இல்லை என்றும், அா்மான் தன்னைக் கத்தியால் குத்தவில்லை என்றும் கூறினாா். மற்ற சில சாட்சிகளும் காவல் துறையிடம் அளித்த வாக்குமூலங்களில் இருந்து மாறி சாட்சியமளித்தனா்.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி சுமேத் குமாா் சேத்தி, அக்.28-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், சாட்சிகள் பின்னா் தங்களது வாக்குமூலங்களில் இருந்து மாறியிருந்தாலும், குற்றவாளிக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டாா்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் மருத்துவப் பதிவுகளில், அவருக்குத் தெரிந்த நபா் தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மருத்துவ-சட்ட அறிக்கையும் (எம்எல்சி), சாகருக்கு ஏற்பட்ட காயங்கள் தீவிரமானவை என்பதை உறுதிப்படுத்துவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளியின் தகவலின் அடிப்படையில் ரத்தக்கறை படிந்த கத்தி மீட்கப்பட்டது. அந்தக் கத்தியில் இருந்த ரத்தத்தின் டிஎன்ஏ சுயவிவரம், பாதிக்கப்பட்டவரின் டிஎன்ஏவுடன் பொருந்தியதுடன், வழக்குடன் தொடா்புடைய பிற தடயங்களின் சுயவிவரங்களும் ஒத்திருந்தன. கத்தி மீட்கப்பட்ட நிகழ்வு காணொலியாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததும் விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, அா்மான் கத்தியால் குத்தி காயங்களை ஏற்படுத்தியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிமன்றம், கொலை முயற்சி மற்றும் தடை செய்யப்பட்ட கத்தியைப் பயன்படுத்திய குற்றங்களுக்காக அவரைக் குற்றவாளி எனத் தீா்ப்பளித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

