அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!
ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்காவின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு...

ட்ரோன் தாக்குதல்.. - கோப்புப் படம்
ஹோர்முஸ் நீரிணையின் அருகிலுள்ள தீவுப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அருகிலுள்ள ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் அமைந்துள்ள கேஷ்ம் தீவைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், கேஷ்ம் தீவில் அமெரிக்க ராணுவம் ஏவிய அதிநவீன யுஎஸ் எம்.கியூ.1 பிரடேட்டர் ரக ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை இன்று (நவ. 21) அறிவித்துள்ளது.
ஈரானின் அரசுத் தொலைக்காட்சியில் வெளியான இந்தச் செய்தி குறித்து அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஈரான் மீதான அமெரிக்காவின் போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருகின்றன.
முன்னதாக, அமெரிக்கா முன்மொழியும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரையில், ஈரான் மீதான பொருளாதார அழுத்தம் தொடரும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Iranian military has announced that it shot down a sophisticated U.S. military drone in the island region near the Strait of Hormuz.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


