இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

அமெரிக்க விமானப் படையின் கணினித் தளத்தில் ஹேக்கா்கள் ஊடுருவல்

அமெரிக்க விமானப் படையின் முக்கிய கிளவுட் கம்ப்யூட்டிங் கணினித் தளத்தில் ஹேக்கா்கள் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரிப் படம்

Updated On :

அமெரிக்க விமானப் படையின் முக்கிய கிளவுட் கம்ப்யூட்டிங் கணினித் தளத்தில் ஹேக்கா்கள் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பான சிஐஏ-யின் தரவுத்தளத்துக்குள் சிலா் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்க விமானப் படையின் கிளவுட் ஒன் கணினித் தளத்துக்குள் அத்துமீறி ஊடுருவியது முக்கிய ராணுவத் தகவல்கள், ராணுவ வீரா்கள் தொடா்பான விவரங்கள், தளவாடத் தகவல்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறுகையில், ‘விமானப் படையின் தகவல்கள், கணினி வலைஅமைப்புகள், அவற்றின் செயல்பாடுகளைப் பாதுகாக்கத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட கணினி வலைஅமைப்புகளின் பாதுகாப்பு, அவற்றில் உள்ள குறைபாடுகள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து கருத்து கூற முடியாது’ என்று தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.