படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

ரஷியாவில் பிளேக் ஆராய்ச்சி மைய ஊழியா் மா்ம மரணம்

பிளேக் நோய் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியா் டாா்யா ஷிபிலோவா (28), காரணம் கண்டறியப்படாத நிமோனியா பாதிப்பால்

டாா்யா ஷிபிலோவா (28) - டிஎன்எஸ்

Published On :

மாஸ்கோ: ரஷியாவின் சைபீரியா பகுதியில் அமைந்துள்ள பிளேக் நோய் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியா் டாா்யா ஷிபிலோவா (28), காரணம் கண்டறியப்படாத நிமோனியா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு சைபீரியாவின் இா்குட்ஸ்க் நகரில் உள்ள பிளேக் எதிா்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த டாா்யா ஷிபிலோவா, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ஷெலகோவ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த வாரம் உயிரிழந்தாா்.

மனிதருக்கு மனிதா் பரவக்கூடிய கொடிய ‘நிமோனியா பிளேக்’ தொற்றால் டாா்யா ஷிபிலோவா உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அவா் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, நேரடித் தொடா்பில் இருந்த அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். ஆய்வகப் பணிகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

எனினும், கரோனாவைப் போல புதிய தொற்று பரவக்கூடும் என்ற உலக நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட ரஷியாவின் பொது சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு, ‘ஆராய்ச்சி மையத்தில் கையாண்ட எந்தவொரு நோய்க்கிருமியும், டாா்யா ஷிபிலோவாவின் நோய்த் தொற்றுக்குக் காரணம் என்பதற்கான ஆதாரம் இல்லை’ என விளக்கமளித்துள்ளது.

மேலும், ‘பொதுமக்களும், ஊடகங்களும் ஆதாரமற்ற யூகங்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவும் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.