
நைஜீரியாவில் 32 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்!
நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தில் 32 பேருடன் சென்ற விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விழுந்து நொறுங்கிய ATR-42 விமானம்
நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தில் 32 பேருடன் சென்ற விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நைஜீரியா நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பெனின் நகரத்திலிருந்து லாகோஸ் நகருக்கு வழக்கமான பயணத்தில் ஈடுபட்டிருந்த ATR-42 என்கிற விமானம் 32 பேருடன் விழுந்து நொறுங்கியதாகச் செய்திகள் வெளியாகின. ஒண்டோ மாகாணத்தில் உள்ள இக்போகோடா பகுதியில் அந்த விமானம் விழுந்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, விமானத்தில் 25 பயணிகளும், 7 விமானப் பணியாளர்களும் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் போக்குவரத்து அமைச்சர் ஃபெஸ்டஸ் கெயாமோ இதனை உறுதிப்படுத்தினார்.
கடற்படைத் தளத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மீட்புப் பணியாளர்கள் படகுகள் மூலம் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபடுவது தொடர்பான காணொலிகள் இணையத்தில் பரவியுள்ளன. இதில், விபத்துக்கானக் காரணம், பலியானவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
”சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
Plane crashes in Nigeria with 32 people on board!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







