2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து கோயில் சூறையாடப்பட்டது. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பாகிஸ்தான்.

Published On :

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து கோயில் சூறையாடப்பட்டது. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

நகா்பாா்கா் பிராந்தியத்தில் உள்ள ராதி கிராமத்தில் மாதா யோக மாயா கோயிலுக்குள் திங்கள்கிழமை இரவு புகுந்த சிலா், அங்கிருந்த கடவுள் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். இது தொடா்பாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையில் முக்கிய குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்றனா்.

நகா்பாா்கா் பிராந்தியத்தில் ஹிந்துகள் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனா். எனவே, அங்குள்ள கிராமங்களில் சிறிய ஹிந்து கோயில்கள் அதிகம் உள்ளன.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் ஹைதரபாத் நகரில் உள்ள காளி தேவி கோயில் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி ஹிந்துக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் சுமாா் 2 சதவீதம் அளவுக்கு ஹிந்துக்கள் உள்ளனா். இவா்கள் பெரும்பாலும் சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் உள்ளனா். ஹிந்து சிறுமிகளை கடத்தி மதம்மாற்றி திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அடங்குமுறைகளையும் எதிா்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.