மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

சௌதியுடன் ஒப்பந்தம்! ஆனால், ஹௌதிக்கு எதிராக படைகளை அனுப்ப துருக்கி மறுப்பு!

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் படைகளை யேமனுக்கு அனுப்ப துருக்கி அரசு மறுப்பு...

Turkish President Recep Tayyip Erdogan

துருக்கி அதிபர் ரெசப் தயீப் எர்டோகன் - கோப்புப் படம் | ஏபி

Published On :

யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படைகளுக்கு எதிராக ராணுவப் படைகளை அனுப்ப மாட்டோம் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.

யேமனில் சௌதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற அரசுப்படைகளுக்கும், ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகின்றது. இந்த மோதலின் மூலம் யேமனின் பெரும் பகுதியை ஹௌதிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, முத்தரப்புப் பாதுகாப்புக்கான “மெக்கா ஒப்பந்தம்” சௌதி, பாகிஸ்தான் மற்றும் துருக்கி அரசுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், சௌதிக்கு ஆதரவாக துருக்கி மற்றும் பாகிஸ்தானின் ராணுவப் படைகள் ஹௌதிகளுக்கு எதிராகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், மற்றொரு நாட்டின் பகுதிக்குள் தாக்குதல் நடத்த துருக்கி அதன் ராணுவப் படைகளை அனுப்பாது என துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹாகான் ஃபிதான் இன்று (அக். 8) அறிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“மெக்கா ஒப்பந்தம் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம். ஏதேனும் ஒரு நாடு தாக்கப்பட்டால், அதன் தற்காப்புக்கு ஆதரவளிப்போம். இது தாக்குதல் நடத்துவதற்கான ஒப்பந்தம் அல்ல. தாக்குதல் நடத்துவதற்காக மற்றொரு நாட்டின் எல்லைக்குள் துருக்கி அதன் படைகளை அனுப்பாது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், சௌதி அரசுக்கு தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இருதரப்பும் ஒன்றிணைந்து செயல்படும் எனவும் அமைச்சர் ஃபிதான் கூறியுள்ளார்.

முன்னதாக, சௌதி, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே மேற்கொள்ளப்பட்ட முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The Turkish government has announced that it will not send military forces against Yemen's Houthi rebels.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.