சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

8 அமைதிக்கான நோபல் பரிசை நான் பெற்றிருக்க வேண்டும்: டிரம்ப் பேச்சு!

அமைதிக்கான நோபல் பரிசை நான் 8 முறை பெற்றிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறித்து...

டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Published On :

நான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போருக்கும், அமைதிக்கான நோபல் பரிசை 8 முறை பெற்றிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (அக். 10) தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் உள்பட உலகில் பல்வேறு போர்களை நிறுத்தியதாகவும் அதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

வாஷ்ங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:

உங்கள் (அமெரிக்க மக்கள்) அதிபராகிய எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இது நார்வே நாட்டுக்கும் நோபல் பரிசு கமிட்டிக்கும் ஏற்பட்ட அழியாத கறை. இந்தப் பரிசு வழங்கப்படாததை நாங்கள் (அமெரிக்கா) எப்போதும் மறக்கமாட்டோம்.

ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும், இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நானும் அந்த நபரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை, இருப்பினும் வாழ்த்துகள்.

நான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போருக்கும், அமைதிக்கான நோபல் பரிசை 8 முறை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்தப் பரிசை நார்வே எனக்கு வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

US President Donald Trump stated on Saturday (Oct. 10) that he should have received the Nobel Peace Prize eight times for the various conflicts he resolved.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.