தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது பற்றி...

நவநீதம் பிள்ளை - Photo | U.N.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த நவீ பிள்ளை என்கிற நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முன்னெடுப்புகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

யார் இந்த நவநீதம் பிள்ளை?
85 வயதாகும் நவநீதம் பிள்ளை, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஆவார். இவர் தமிழ்வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்.
1973ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட உதவி செய்தவர். தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் முதல் வெள்ளையினத்தவர் அல்லாத பெண் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.
2021 முதல் 2025 வரை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இலங்கை தமிழர்கள் பிரச்னைகளுக்காகவும் இவர் குரல் கொடுத்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
Summary
Nobel Peace Prize for Navanethem "Navi" Pillay of Tamil descent!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


