ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நவநீதம் பிள்ளைக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளதைப் பற்றி...

நவநீதம் பிள்ளை - முதல்வர் விஜய்.

Published On :

நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நவநீதம் பிள்ளைக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த நவீ பிள்ளை என்கிற நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும், நீதிக்காகவும் அயராது குரல் கொடுத்துவருபவரும், தென்னாப்பிரிக்காவாழ் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான நவநீதம் பிள்ளை, 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னாப்பிரிக்க மண்ணில் இனவெறிக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் வழியே தனது பயணத்தைத் தொடங்கி, அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பதவி வகித்த நவநீதம் பிள்ளை, அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. மனித உரிமைகள், சமத்துவம், நீதி மற்றும் உலக அமைதி ஆகிய உயரிய விழுமியங்களுக்காக அயராது பாடுபட்டுவரும் நவநீதம் பிள்ளை அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay has congratulated Navanethem Pillai on being selected for the Nobel Prize.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.