இலக்கியத்துக்கான நோபல் பரிசு! கனடா எழுத்தாளர் ஆன் கார்சன் வென்றார்!
2026 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆன் கார்சன் வென்றுள்ளார்...

2026 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆன் கார்சன் வென்றுள்ளார்... - எக்ஸ்/Nobel academy
நிகழாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு கனடா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆன் கார்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிகழாண்டின் (2026) நோபல் பரிசுகள் வேதியல், இயற்பியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த 76 வயதான எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு வழங்கப்படும் என நோபல் அகாடெமி இன்று (அக்.8) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, நோபல் அகாடெமி வெளியிட்டுள்ள செய்தியில்,
“சமகால இலக்கியத்துக்குப் புதிய வடிவங்களை உருவாக்கிய அவரது துணிச்சலான மற்றும் புதுமையான கலைப்படைப்பிற்காக; 2026 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு வழங்கப்படுகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 76 வயதான எழுத்தாளர் ஆன் கார்சன் கனடா நாட்டின் டொராண்டோ நகரத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 1981 ஆம் ஆண்டு "ஒடி எட் அமொ எர்கோ சம்" எனும் தலைப்பில் இலக்கியம் குறித்த தனது ஆய்வேட்டை (தீசிஸ்) வெளியிட்டார். மேலும், இவர் ஏராளமான கவிதைகள் மற்றும் நூல்களை எழுதியுள்ளார்.
கிரேக்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர் மொழிப்பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டதுடன், கனடா மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Canadian writer Anne Carson has been selected for this year's Nobel Prize in Literature.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


