விசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஏமன் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து புலம்பெயர்ந்தோர் 109 பேர் பலி! 116 பேரைக் காணவில்லை!

ஏமன் நாட்டிற்குச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் புலம்பெயர்ந்தோர் 109 பேர் பலியாகினர்.

கோப்புப் படம்

Published On :

ஏமன் நாட்டிற்குச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் புலம்பெயர்ந்தோர் 109 பேர் பலியாகினர்.

ஆப்ரிக்க நாடான ஜிபூட்டியிலிருந்து ஏமன் நாட்டிற்கு 350 பேர் படகு மூலம் அனுமதியின்றி புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அந்தப் படகு ஜிபூட்டியின் ஓபோக் நகருக்கு வடக்குப் பகுதியில் அக்டோபர் 8 இரவு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

படகு கடலில் மூழ்கியதில் 15 குழந்தைகள் உள்பட 109 பேர் பலியாகினர். சுமார் 116 பேரைக் காணவில்லை என சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "இது ஒரு பேரிழப்பு. உயிர் பிழைத்தவர்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த, உறவினர்கள் பற்றிய தகவல் ஏதுமின்றி காத்திருக்கும் குடும்பத்தினருக்கு நாங்கள் உடனிருக்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக அவசர உதவிகளை வழங்க ஜிபூட்டி அதிகாரிகளுடன் இணைந்து சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு களத்தில் பணியாற்றி வருவகிறது.

பிழைப்புக்காக ஜிபூட்டி - ஏமன் இடையே உள்ள பாப்-எல்-மண்டேப் நீரிணையைக் கடந்து ஏமன் வழியே வளைகுடா நாடுகளை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் பலருக்கும் இந்த விபத்து மிகப்பெரிய துயரச் சம்பவமாக கடுமையான நினைவூட்டலாக அமைந்துள்ளது.

கடலில் மூழ்கியவர்களில் மீட்கப்பட்ட 109 உடல்களில் 52 ஆண்கள், 42 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் அடங்குவர் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

விபத்துக்குள்ளான படகிலிருந்து எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் நிலையில், 116 பேரைக் காணவில்லை.

கடந்த செப்டம்பர் 10 முதல், எத்தியோப்பியாவிலிருந்து ஜிபூட்டிக்கு 20,000-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்புத் தெரிவித்துள்ளது.

ஜிபூட்டி வழியாக ஏமனுக்கு கடல்வழியே செல்வது மிகவும் குறுகிய தொலைவு என்பதால் இந்தப் பாதையில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.

2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்தப் பகுதியில் 900-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலியானதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இந்தப் பாதை வழியே பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கப்பல் விபத்து ஒன்றில் ஒன்பது பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் 45 பேரைக் காணவில்லை.

இந்த வழியே பயணம் மேற்கொள்வோரில் பெரும்பாலானோர் எத்தியோப்பியா அல்லது சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் பலர் ஜிபூட்டியில் சிக்கிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

Summary

Boat bound for Yemen capsizes; 109 migrants dead, 116 missing!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.