பிகார்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!
கங்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த துயரச் சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாகப் பலியானதைப் பற்றி...
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் நடந்த மீட்புப் பணிகள்.
பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் ஷியாம்சந்த் கிராமம் அருகே கங்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த துயரச் சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
பிகாரின் வைஷாலி மாவட்டத்திற்கு உட்பட்ட ராகோபூர் தியாரா பகுதியிலிருந்து ராம்பூர் ஷியாம்சந்த் பகுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 20 முதல் 30 பேர் வரை ஒரு படகில் கங்கை ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்தபோது நடு ஆற்றில் எதிர்பாராதவிதமாக படகு நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. குழந்தைகள், பெண்கள் என அனைவரும் கூச்சலிட்ட நிலையில், படகில் இருந்த அனைவரும் ஆற்று நீருக்குள் தத்தளித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றனர்.
இருப்பினும், இந்தக் கோரச் சம்பவத்தில் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 11 பேர் உயிரிழந்ததாக வைஷாலி மாவட்ட ஆட்சியர் வர்ஷா சிங் உறுதிப்படுத்தினார்.
ஆற்றில் மூழ்கிப் பலர் மாயமாகியுள்ளதால், அவர்களைத் தேடும் பணிகளும் மீட்பு நடவடிக்கைகளும் இரவிலிருந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர், கிராம மக்களின் உதவியுடன் தீவிர மீட்புப் பணியில் இறங்கினர்.
ஆற்று நீரில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாயமானவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு ஹாஜிபூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ராகோபூர் எம்.எல்.ஏவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவ் அளித்த தகவலின்படி, 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் மேலும் 3 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.
பிகாரின் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக முதல்வர் சம்ராட் சௌத்ரி, படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Summary
The incident took place in Bihar's Vaishali district, with most of the victims reportedly being children. CM Samrat Choudhary expressed grief over the loss of lives and announced financial assistance of Rs 4 lakh each for the families of the deceased.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

