ஹேக் செய்யப்பட்ட பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட் குளிர்பதனப் பெட்டிகள்! ஏஐ பார்த்த வேலையா?
ஹேக் செய்யப்பட்ட பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட் குளிர்பதனப் பெட்டிகள் பற்றி..
சூப்பர் மார்க்கெட்
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏராளமான சூப்பர் மார்க்கெட்டுகளில் இயங்கி வந்த குளிர்பதனப் பெட்டிகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், ஏராளமான உணவுப் பொருள்கள் வீணாகியிருக்கின்றன.
இதுவரை அடையாளம் காணப்படாத அமைப்பு ஒன்று, பிரான்ஸ் நாட்டின் சூப்பர் மார்க்கெட்டுகளில் இயங்கி வந்த குளிர்பதனப் பெட்டிகளின் குளிர் நிலையை 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்த்தி பல மணி நேரம் இயக்கியிருக்கின்றன.
இதனால் சில கடைகளில் இருந்த குளிர்பதனப் பெட்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளன. அடையாளம் தெரியாத சைபர் தாக்குதல் என்று இது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு காவல்துறை வெளியிட்ட தகவலில் மிகப்பெரிய அளவில் உணவுப் பொருள்களை குறி வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏராளமான உணவுப் பொருள்கள் வீணாகியதோடு தீவிபத்து சம்பவங்களும் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தும் அபாயம் இருக்கும் துறைகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
வெளியிலிருந்து குளிர்பதனப் பெட்டிகளின் இயக்கத்தை மாற்றியமைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பல்வேறு துறையினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருகிறது.
மனிதக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி செய்யறிவு மேற்கொண்ட சைபர் தாக்குதலா இது என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

