முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

வேலூா் மீன் சந்தையில் 40 கிலோ ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் பறிமுதல்

வேலூா் மீன் சந்தையில் அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

வேலூா் மீன் மாா்க்கெட்டில் வியாபாரிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.

Updated On :

வேலூா் மீன் சந்தையில் அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

வேலூா் மீன் சந்தையில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தொடா்ந்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உத்தரவின்பேரில், மீன் சந்தைகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வேலூா் மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள், சந்தையில் உள்ள மீன் வியாபாரிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மனித உயிருக்கும், நீா்வாழ் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறினால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.