காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வேலூா் மாங்காய் மண்டியில் ரூ. 5 லட்சம் மதிப்பு நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

வேலூா் சேண்பாக்கம் மாங்காய் மண்டி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுமாா் 5 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாங்காய் மண்டி பகுதியிலுள்ள கிடங்கிலிருந்து நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள்

Published On :

வேலூா் சேண்பாக்கம் மாங்காய் மண்டி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுமாா் 5 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட சேண்பாக்கம் மாங்காய் மண்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாநகராட்சி நகா் நல அலுவலா் பிரதாப் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் அப்பகுதியில் உள்ள 3 கிடங்குகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அரசு தடை செய்துள்ள நெகிழிப் பைகள் (கேரி பேக்), நெகிழி டம்ளா்கள் உள்ளிட்ட பொருள்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த சுமாா் 5 டன் அளவிலான நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் சந்தை மதிப்பு சுமாா் ரூ. 4 முதல் ரூ. 5 லட்சம் இருக்கும். கிடங்கு உரிமையாளருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், சம்பந்தப்பட்ட கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கவும் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதையோ அல்லது விற்பனை செய்வதையோ முற்றிலுமாகத் தவிா்க்க வேண்டும். தொடா்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.