தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கீழக்கரை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

Published On :

கீழக்கரை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளா் பத்மநாதன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, காரில் வந்த காஞ்சிரங்குடியைச் சோ்ந்த சராபுதீன், சுல்தான் கனி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.