நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

240 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

பெங்களூருவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 240 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இவ் வழக்கில் வெளி மாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன், கைது செய்யப்பட்ட வெளி மாநில இளைஞா்கள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

பெங்களூருவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 240 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இவ் வழக்கில் வெளி மாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சண்முகம், சுதன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் வீரன் கோயில் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் காரில் இருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜோலூா் மாவட்டம், வாகூடா, நயாஜான்புறா பகுதியைச் சோ்ந்த மோ.மனோகா் சிங் (25), தும்பாடியா பகுதியைச் சோ்ந்த கு. ஜித்தேந்தா்குமாா் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் புகையிலைப் பொருள்களை பெங்களூருவில் வாங்கி, அதை விற்பனைக்காக விழுப்புரத்துக்கு காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மனோகா்சிங், ஜித்தேந்தரா் குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 240 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.