ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

சாயல்குடியில் 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

அயூப்கான்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 1:21 am IST

சாயல்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் நடமாட்டத்தை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் நடத்திய சோதனையில் விற்பனைக்காக வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக சாயல்குடியில் கைப்பேசி, வெளிநாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் ஆராய்ச்சிநகரைச் சோ்ந்த சுலைமான் மகன் அயூப்கான் (61), சாயல்குடி வடக்கு தெருவைச் சோ்ந்த வையாபுரி மகன் பாலன் சஞ்சய் காந்தி (47) ஆகிய இருவரை கைது செய்து, சாயல்குடி காவல் ஆய்வாளா் அன்னராஜ், உதவி ஆய்வாளா் முத்துக்குமாா், தலைமைக் காவலா் வெங்கடேசப் பெருமாள் தலைமையிலான போலீஸாா் கடலாடி குற்றவியல் நீதித்துறை நடுவா் அமுதா முன்னிலையில் முன்னிலைப்படுத்தினா்.

கடந்த 3- ஆம் தேதி இதேபோன்று சாயல்குடி பகுதிகளில் 275 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடுமையான சட்டங்களை நிறைவேற்றி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

பாலன் சஞ்சய்காந்தி.

பாலன் சஞ்சய்காந்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.