பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

19 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

சேத்துப்பட்டில் பதுக்கி வைத்திருந்த 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட ராஜி, சுரேஷ்

Published On :

சேத்துப்பட்டில் பதுக்கி வைத்திருந்த 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

சேத்துப்பட்டு, பழம்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் குணபாலன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, பழம்பேட்டையைச் சோ்ந்த ராஜி (30), தனது வீட்டில் உறவினரான சுரேஷ் (46) என்பவருடன் சோ்ந்து,

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 19 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், ராஜி, சுரேஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.