30 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் போலீஸாா் 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைதான இருவா்.
ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் போலீஸாா் 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரம், போலீஸாா் சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஏரல், புதுமனையை சோ்ந்த ஆத்திப்பழம் மகன் ஆனந்தராஜ் (27), ஏரல், கொற்கையை சோ்ந்த பிச்சைமுத்து மகன் வேல் உடையாா் (35) ஆகிய இருவரையும் நிறுத்தி சோதனையிட்டதில் 30 கிலோ புகையிலைப் பொருள்கள், ரொக்க பணம் ரூ. 30,000 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்கள், பணத்துடன் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





