ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல்! - ஈரானின் அறிவிப்பால் அதிர்ச்சி!
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் மோதி சரக்குக் கப்பல் மூழ்கியதாக ஈரான் அறிவிப்பு...

ஹோர்முஸ் நீரிணை - கோப்புப் படம் | ஏபி
ஹோர்முஸ் நீரிணையில் பொருத்தப்பட்டுள்ள கண்ணிவெடியில் மோதி சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரால், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கப்பல்களும், அந்நாடுகளின் கூட்டாளிகளின் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு ஈரான் அரசு தடைவிதித்துள்ளது. இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட சில பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளன.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அனுமதியின்றி சட்டவிரோதமான பாதையில் செல்ல முயன்ற சரக்குக் கப்பல் ஒன்று புதன்கிழமை (அக். 14) காலை, அங்குள்ள கண்ணிவெடியில் மோதி கடலில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சட்டவிரோதமாக அபாயம் மிகுந்த பாதையின் வழியாக சுமார் 2,500 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல் கண்ணிவெடியில் மோதி தீப்பிடித்து கடலில் மூழ்கியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படையின் கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது.
அமெரிக்கா உடனான போர் தொடங்கியதில் இருந்து கப்பல் ஒன்று மூழ்கியதாக, ஈரான் அறிவித்துள்ளது இதுவே முதல்முறை. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கப்பல் மற்றும் அதன் மாலுமிகளின் நிலைக்குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, ஈரான் தடை விதித்ததைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க படைகள் பாதுகாப்பு வழங்கி வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran's Revolutionary Guard has announced that a cargo ship sank after striking a mine in the Strait of Hormuz.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


