24 மணிநேரத்தில்.. ஹோர்முஸ் அருகே கண்ணிவெடியில் சிக்கிய 5 எண்ணெய்க் கப்பல்கள்!
24 மணிநேரத்தில் ஹோர்முஸ் நீரிணையில் 5 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியது குறித்து...

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கிய 5 எண்ணெய்க் கப்பல்கள்... - கோப்புப் படம்
ஹோர்முஸ் நீரிணையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் போரைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் செல்வதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும், அவர்களின் கூட்டாளிகளின் கப்பல்களுக்கும் ஈரான் அரசு தடை விதித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே வெளிநாடுகளின் சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மற்ற பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளன.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தங்களின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்ல முயன்ற 5 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி தீப்பற்றி எரிந்ததாக, ஈரானிய கடற்படை இன்று (நவ. 14) அறிவித்துள்ளது.
இதில், இன்று காலையில் இருந்து மட்டும் 2 கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தத் தாக்குதலில் சிக்கிய கப்பல்களில் பயணித்த மாலுமிகளின் நிலை குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 5 கப்பல்களும், ஈரானின் எச்சரிக்கையைப் புறக்கணித்து கப்பல்களின் ரேடார் கருவிகளை அணைத்தபடி அவ்வழியாகச் சென்றதாக, ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
five oil tankers have been struck by mines in the Strait of Hormuz within the last 24 hours alone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


