நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் விடுதலை!மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு! தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!அக். 23 முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில்!வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது: எஸ்பிஐ விளக்கம்வங்கி, நிதிப் பங்குகள் சரிவு எதிரொலி: வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!6 வார உச்சத்தில் இந்திய ரூபாய்!

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! பலி எண்ணிக்கை 74,500 ஆக அதிகரிப்பு!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,500 ஆக அதிகரித்துள்ளது குறித்து...

death toll rises in gaza

காஸா மருத்துவமனையில் சிகிச்சைக்கு இடமின்றி தவிக்கும் பொதுமக்கள்... - கோப்புப் படம்

Updated On :

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,500 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில், பாலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. இந்தப் போரில், காஸாவில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2025 அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது.

ஆனால், காஸாவில் உள்ள ஹமாஸ் படைகளுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறும் இஸ்ரேலிய படைகள், தொடர்ந்து அங்குள்ள மக்கள் குடியிருப்புகள், அகதி முகாம்கள் ஆகிவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், காஸாவில் கடந்த 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,494 ஆக அதிகரித்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (அக். 21) அறிவித்துள்ளது.

இத்துடன், இஸ்ரேலிய தாக்குதல்களால் படுகாயமடைந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,75,604 ஆக அதிகரித்துள்ளது. காஸாவிலுள்ள மருத்துவக் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதால் அங்கு உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தவித்து வருகின்றனர்.

இதில், கடந்த 2025 அக்டோபர் மாதம் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகான இஸ்ரேலின் தாக்குதல்களால் 1,534 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The death toll from Israel's attacks on Gaza has reportedly risen to 74,500.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.