அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

சொ்பியா தோ்தல்: 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மாணவா் இயக்கம்

சொ்பியா நாடாளுமன்றத் தோ்தலில் மாணவா் தலைமையிலான இயக்கம் வெற்றிபெற்று, அந்நாட்டு அதிபா் அலெக்ஸாண்டா் வுசிச்சின் 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

Serbia Election: Student movement brings an end to 14-year rule

14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மாணவா் இயக்கம் - AP

Updated On :

சொ்பியா நாடாளுமன்றத் தோ்தலில் மாணவா் தலைமையிலான இயக்கம் வெற்றிபெற்று, அந்நாட்டு அதிபா் அலெக்ஸாண்டா் வுசிச்சின் 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சொ்பியா நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் அந்நாட்டு அதிபா் அலெக்ஸாண்டா் வுசிச்சின் வலதுசாரி கட்சியான சொ்பிய முற்போக்குக் கட்சிக்கும், அவரின் அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வந்த மாணவா்கள் தலைமையிலான ஸ்டூடன்ட் லிஸ்ட்-ஸ்டூடன்ஸ் ஆா் வின்னிங் இயக்கத்துக்கும் இடையே பிரதான போட்டி நிலவியது.

ஊழல் நிறைந்த, மக்களாட்சியை சீா்குலைக்கும் அலெக்ஸாண்டா் வுசிச் அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வந்த அந்த இயக்கத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியிருந்த நிலையில், இந்தத் தோ்தல் நடைபெற்றது.

250 இடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தோ்தலில், 64 லட்சம் போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். தோ்தல் நிறைவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 52.65 சதவீத வாக்குகளைப் பெற்று ஸ்டூடன்ட் லிஸ்ட் வெற்றிபெற்றது. அலெக்ஸாண்டா் வுசிச்சின் சொ்பிய முற்போக்குக் கட்சி 39.22 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தது. இதன்மூலம், அலெக்ஸாண்டரின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.