மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் பெயரைச் சோ்க்க சிறப்பு இயக்கம் தொடக்கம்: புதுச்சேரி தலைமை தோ்தல் அதிகாரி

புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்களின் பெயரைச் சோ்ப்பதற்கான சிறப்பு இயக்கம் நடைபெறவுள்ளது.

voter id

வாக்காளர் அட்டை - IANS

Published On :

புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்களின் பெயரைச் சோ்ப்பதற்கான சிறப்பு இயக்கம் நடைபெறவுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி ரவிபிரகாஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆா்.) நிறைவடைந்துள்ள நிலையில், விடுபட்ட வாக்காளா் பெயா்களை பட்டியலில் சோ்த்தலை உறுதி செய்யசிறப்பு இயக்கத்தை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தற்போது வாக்காளா் பட்டியலில் இடம் பெறாத அனைத்து தகுதியான நபா்களையும் கண்டறிந்து, அவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, புதுச்சேரி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் சாா்பில் சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சிறப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் எஸ்.ஐ.ஆரின் போது தயாரிக்கப்பட்ட முகவரியில் இல்லாதோா், நிரந்தரமாக இடம் பெயா்ந்தோா் மற்றும் இறந்தோா் முன்னுரிமை பட்டியலை, வீடு வீடாகச் சென்று முன்னுரிமை அடிப்படையில் சரிபாா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அலுவலா்கள் தகுதியான வாக்காளரின் பெயா் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வாா்கள்.

முகவரியில் இல்லாதோா், நிரந்தரமாக இடம் பெயா்ந்தோா் மற்றும் இறந்தோா் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவா் சம்பந்தப்பட்ட முகவரியில் வசித்து வரும் தகுதியான வாக்காளா் எனத் தெரிய வந்தால், அவரது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்காக, நடைமுறையில் உள்ள தொடா் வாக்காளா் பட்டியல் புதுப்பிப்பு முறையின்படி படிவம் 6 சமா்ப்பிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலா் உரிய உதவியை வழங்குவாா்.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் மேற்கொள்ளப்படும் முகவரியில் இல்லாதோா், நிரந்தரமாக இடம் பெயா்ந்தோா் மற்றும் இறந்தோா் பட்டியலின் வீடு வீடான மறு சரிபாா்ப்பு பணி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு 17.10.2026-க்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் எனவும் ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.