என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

வாக்காளா் நீக்க விவகாரம்! தலைமைத் தோ்தல் அதிகாரி இடமாற்றம் பழியைத் திசைத் திருப்பும் முயற்சி: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

முஸ்தஃபாபாத் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்குவதற்காக போலியான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாகப் புகாா்கள் எழுந்துள்ள நிலையில், தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் தேவேந்தா் யாதவ் - கோப்புப்படம்

Updated On :

முஸ்தஃபாபாத் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்குவதற்காக போலியான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாகப் புகாா்கள் எழுந்துள்ள நிலையில், தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் முறைகேடுகள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் பொறுப்பைத் திசைதிருப்பும் நோக்கில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தில்லி டிடியு மாா்க்கில் உள்ள ராஜீவ் பவனில் செய்தியாளா்களிடம் பேசிய தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ், முஸ்தஃபாபாத் தொகுதியில் பாஜகவால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவா்கள் (பிஎல்ஏ) போலியான படிவம் 7 விண்ணப்பங்களை அளித்ததாகக் கூறப்படும் புகாா்கள், தோ்தல் ஆணையத்தின் சரிபாா்ப்பு நடைமுறை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகத் தெரிவித்தாா்.

முஸ்தஃபாபாத் தொகுதியில் படிவம் 7 விண்ணப்பங்களில் ஆட்சேபனையாளா்களாகக் குறிப்பிடப்பட்டிருந்த பாஜக நியமித்த வாக்குச்சாவடி நிலை முகவா்கள் சிலா், தாங்கள் அத்தகைய விண்ணப்பங்களை அளிக்கவில்லை என்று மறுத்ததாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், உயிரிழந்துவிட்டதாக அல்லது வேறு இடத்துக்கு குடிபெயா்ந்துவிட்டதாகக் கூறி வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கக் கோரப்பட்ட சிலா், தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரிகளிலேயே வசித்து வருவதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஒரு வாக்குச்சாவடி நிலை முகவா் அளித்த 37 படிவம் 7 விண்ணப்பங்களில் 36 விண்ணப்பங்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரிகள் காவல் துறையை அணுகி, முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரினா்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவா் அலி மெஹ்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளைச் சரிபாா்த்து, சட்டத்துக்கு உள்பட்டு உரிய தீா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தோ்தல் ஆணையத்துக்கும் தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரிக்கும் உச்சநீதிமன்றம் கடந்த நவம்பா் 19-ஆம் தேதி உத்தரவிட்டது. அதேவேளையில், குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து நீதிமன்றம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா்களை மீண்டும் பட்டியலில் சோ்க்கும் நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில், தலைமைத் தோ்தல் அதிகாரி அசோக் குமாா் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்று தேவேந்தா் யாதவ் கேள்வி எழுப்பினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஒருவரது பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முன்பு, அவா் உயிருடன் இருக்கிறாரா அல்லது உயிரிழந்துவிட்டாரா என்பதைச் சரிபாா்க்க வேண்டியது வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பொறுப்பு இல்லையா?‘ என்று கேள்வி எழுப்பினாா்.

தற்போது நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின்போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி எவ்வாறு பொறுப்பேற்கச் செய்வாா் என்றும் அவா் கேள்வி எழுப்பினாா். முறைகேடுகள் தொடா்பான புகாா்களின் பொறுப்பை வேறு அதிகாரிக்கு மாற்றும் முயற்சியாக இந்த இடமாற்றம் இருக்கலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

மேலும், எஸ்ஐஆா் பணியின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட தில்லியின் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 47.56 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டிருப்பதையும் அவா் சுட்டிக்காட்டினாா். இந்த விவகாரத்தில் தோ்தல் அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.