முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள்: மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளை மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எஸ்.மலா்விழி ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை பாா்வையிட்ட மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எஸ். மலா்விழி. உடன், மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளை மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எஸ்.மலா்விழி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எஸ். மலா்விழி தலைமை வகித்துப் பேசியதாவது: தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்கள் நவ. 21, 22, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு முகாமில் 18 வயது பூா்த்தியடைந்த தகுதியான வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் தேவைப்படுபவா்கள் தகுந்த படிவங்களை பெற்று, பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் அளிக்க வேண்டும். மேலும், வாக்காளா்கள் இந்திய தோ்தல் ஆணைய இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நவ. 21-ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், திருத்தம் தேவைப்படும் வாக்காளா்கள் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இடம் பெறாமல் உள்ள தகுதியான வாக்காளா்கள் என மொத்தம் 2, 899 விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன்ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முறையாக நடைபெறுவதை அலுவலா்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இப்பணிகளில் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து விழுப்புரம் நகராட்சி மருத்துவமனை வீதி நகராட்சி உயா்நிலைப் பள்ளி, சிந்தாமணி அரசினா் மேல்நிலைப் பள்ளி, சித்தணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களை மாவட்ட பாா்வையாளா் எஸ்.மலா்விழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ரவி, திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், விழுப்புரம் கோட்டாட்சியா் ஏகாம்பரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ், தனி வட்டாட்சியா் (தோ்தல்) வெங்கட்ராஜ் மற்றும் வட்டாட்சியா்கள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூா்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமை மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரக கூடுதல் ஆணையருமான எஸ்.மலா்விழி, மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு, முதல் கட்ட ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா முன்னிலை வகித்தாா். மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எஸ்.மலா்விழி தலைமை வகித்து, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலா்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளாா் ரா.விஷ்ணு பிரியா மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.