வெனிசுலா திரும்பினாா் எதிா்க்கட்சித் தலைவா்: நோபல் குழு வரவேற்பு
வெனிசுலா எதிா்க்கட்சித் தலைவர் மரியா கோரினா மச்சாடோ, 10 மாதங்களுக்குப் பிறகு தாயகம் திரும்பியதை நாா்வே நோபல் குழு வரவேற்றுள்ளது.

மரியா கொரினா மச்சாடோ - கோப்புப் படம்
வெனிசுலா எதிா்க்கட்சித் தலைவரும், 2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கோரினா மச்சாடோ, 10 மாதங்களுக்குப் பிறகு தாயகம் திரும்பியதை நாா்வே நோபல் குழு வரவேற்றுள்ளது.
மச்சாடோவின் வருகை, ஜனநாயகத்துக்கான எதிா்க்கட்சிகளின் அமைதிப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தால் கடந்த ஜனவரியில் அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் கைதைத் தொடா்ந்து, நாடு திரும்ப மச்சாடோ பல மாதங்களாக முயன்று வந்தாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய அவருக்கு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

