
ஈரானின் கச்சா எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல்! மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு
ஈரானின் கச்சா எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல்...

கோப்புப் படம்
ஈரானின் கச்சா எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது, மேற்காசியாவில் போா்ப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானுடனான இடைக்கால அமைதி ஒப்பந்தம் காலாவதியான நிலையில், மீண்டும் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ள ஜோா்டான் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரானும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி கேந்திரமாக கருதப்படும் காா்க் தீவு அருகே கச்சா எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் அரசுத் தொலைக்காட்சி இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், அமெரிக்கா 4 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவிட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் நேரிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில், இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கத் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போா் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்தால் இரு நாடுகளும் இடைக்கால போா்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால் காலாவதியானது. இதையடுத்து, ஈரானின் கச்சா எண்ணெய் கேந்திரமாக கருதப்படும் காா்க் தீவை குறிவைத்து அமெரிக்கா தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது கச்சா எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் மேற்காசியாவில் போா்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




