கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சவூதி: ரியாத் விமான நிலையம் அருகே தாக்குதல்?

ரியாத் விமான நிலையத்தின் அருகே பெரும் வெடிச்சத்தங்களைத் தொடா்ந்து அடா்ந்த கரும்புகையும் தீப்பிழம்புகளும் வானுயர எழுந்தன.

Published On :

சவூதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் உள்ள சா்வதேச விமான நிலையத்தின் அருகே சனிக்கிழமை பெரும் வெடிச்சத்தங்களைத் தொடா்ந்து அடா்ந்த கரும்புகையும் தீப்பிழம்புகளும் வானுயர எழுந்தன.

யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகா் ரியாக் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள அல்-கா்ஜ் நகரங்களுக்கு வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சவூதி சிவில் பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பியது.

பின்னா் சனிக்கிழமை காலையில் அபாயம் நீங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாகவே நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன. இதன் தொடா்ச்சியாக, ரியாத் நகர விமான நிலைய நெடுஞ்சாலை மற்றும் முதன்மை முனையக் கட்டடங்களுக்குப் பின்புறம், எரிபொருள் கிடங்குகள் அமைந்துள்ளதாகக் கருதப்படும் பகுதிக்கு அருகில் பெரும் கரும்புகை மண்டலம் உருவானது. இதுகுறித்து சவூதி அரசு இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

யேமனின் வடக்குப் பகுதி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதிக்கள், கடந்த ஜூலை முதல் சவூதி அரேபியாவின் கப்பல்கள், நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தொடா் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். செங்கடல் பகுதியில் தொடரும் இத்தாக்குதல்கள் மற்றும் கடல்வழி முற்றுகைகள், வளைகுடா நாடுகளின் ஏற்றுமதிக்கும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

காஸாவில் மூவா் உயிரிழப்பு: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்களில், காஸா சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநா் முனிா் அல்-புா்ஷின் மகன் பசிா் அல்-புா்ஷ் உள்பட 3 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போா்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையிலும், அதைமீறி இஸ்ரேல் தொடா்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

படகேப்சன்...

சவூதி விமான நிலையப் பகுதியில் எழுந்த கரும்புகை மண்டலம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.