கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ஹெச்-1பி விசா கட்டணத்தை ஓராண்டு நீட்டிக்க டிரம்ப் ஒப்புதல்

ஹெச்-1பி விசா கட்டணத்தை ஓராண்டு நீட்டிக்க டிரம்ப் ஒப்புதல்

டொனால்ட் டிரம்ப் / ஹெச் 1-பி - கோப்புப் படம்

Published On :

வெளிநாட்டுத் தொழிலாளா்களைப் பணியமா்த்தும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஒரு லட்சம் அமெரிக்க டாலா் ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணத்தை ஓராண்டு நீட்டிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவில், கடந்த 2025-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஹெச்-1பி விசா கட்டணத்தால் பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஹெச்-1பி விசா பதிவுகள் 92 சதவீதம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹெச்-1பி விசாவால் இந்தியா்கள் அதிகம் பலனடைந்து வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிரம்ப் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமெரிக்கத் தொழிலாளா்களுக்கான சந்தை அணுகலை ஊக்குவிக்கவும், உள்நாட்டுப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மிகவும் திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்படுவதை உறுதிசெய்யவும் ஹெச்-1பி விசா கட்டணம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது’ என்றாா்.

கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஹெச்-1பி விசா கட்டணம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில், தற்போது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் ஏற்கெனவே மாணவா் விசாக்கள் வாயிலாக அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்குப் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஹெச்-1பி விசா விண்ணப்பங்களை பல துறைகளும் விரிவாக ஆய்வு செய்வதற்கான மற்றொரு உத்தரவையும் டிரம்ப் பிறப்பித்துள்ளாா். அதன்படி, அமெரிக்க உள்துறை அமைச்சகம், தொழிலாளா் துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவுள்ளது.

Summary

Trump approves one-year extension of H-1B visa fees.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.