கரோனா மனிதர்களை விட்டுப் போகாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகையே உலுக்கி வரும் கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக பாதிப்புக்குள்ளான நாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த
கரோனா மனிதர்களை விட்டுப் போகாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


ஜெனீவா: உலகையே உலுக்கி வரும் கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக பாதிப்புக்குள்ளான நாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த பொது ஊரடங்கை தளர்த்தத் தொடங்கியிருக்கும் நிலையில், கரோனா தொற்று கரோனா நீண்ட காலம் நம்மோடு இருக்கலாம் என்றும், ஒரு போதும் அழியாமலும் போகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கியது கரோனா நோய்த் தொற்று. இந்த தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 44,30,242-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,98,183 பேர் உயிரிழந்துள்ளனர். 

"முதன்முறையாக மனித சமூகத்துக்குள் பரவத் தொடங்கி மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த தொற்று பரவலை தடுக்கும் முயற்சியாக பாதிப்புக்குள்ளான நாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த பொது ஊரடங்கால் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து தொற்று பாதித்த நாடுகள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் போராடி வருகின்றன.  

இந்த நிலையில் புதிய கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் இப்போதைக்கு விலகிச் செல்லாது, நாம் எப்போது அதை வெல்வோம் என்று கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே, உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பேரிடர் கால இயக்குநர் மைக்கேல் ரயான் எச்சரித்துள்ளார். 

ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கரோனா தொற்று காலப்போக்கில் நமது சமூகத்தில் உள்ள மற்றொரு பெருந்தொற்றாக மாறக்கூடும், மேலும் இந்த தொற்று கரோனா நீண்ட காலம் நம்மோடு இருக்கலாம் என்றும், ஒரு போதும் அழியாமல் கூட போகலாம். நாம் இதனை உணர்ந்து கொள்வது முக்கியம். இந்த தொற்று எப்போது ஒழியும் என்று கணிப்பது கடினமாக உள்ளது. 

தடுப்பு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ இல்லாமல், உலக மக்களுக்கு போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க இன்னும் வெகுதூரம் போகவேண்டி இருக்கும். தடுப்பு மருந்து கண்டிபிடித்தால் இந்த தொற்றை ஒழிக்க வழி இருக்கிறது. ஒருவேளை கரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டாலும், தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகள் தேவைப்படும். தடுப்பு மருந்துகள் வீரியம் உள்ளதாக இருக்க வேண்டும். அதனை போதுமான அளவு உற்பத்தி செய்வதற்கும், அவற்றை உலக அளவில் விநியோகம் செய்வதற்கும், அனைத்து மக்களுக்கும் எளிதாகக் கிடைப்பதற்கான தீவிர முயற்சிகள் தேவைப்படும். எனவே, கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் இப்போதைக்கு நம்மை விட்டு விலகிச் செல்லாது.

மேலும் "எச்.ஐ.வி தொற்று அழிக்கப்படவில்லை; ஆனால், அதனை கட்டுப்படுத்தும் வழிகளை கண்டறிந்துள்ளோம்". கரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிப்பதையும் என்னால் நம்ப முடியவில்லை.

ஒட்டுமொத்த உலகையே கவலையில் ஆழ்த்தி உள்ள கரோனா எதிர்கால நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாற்றுவதற்கு "உலகிற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக" உள்ளதாக நினைக்கிறேன். எனவே, உலக நாடுகள் அனைத்து தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு கண்டால் மனித சமூகம் முன்னேற்றத்தை அடைவதற்கு ஒரு வாய்ப்பு.

இந்த முயற்சியில் நாம் வெற்றி பெறுவதற்கு அரசியல் ரீதியாகவும், நிதி, செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று மைக்கேல் ராயன் கூறினார். 

மேலும் தொற்று நோயுடன் தொடர்புடைய சுகாதாரத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்த ராயன், "உதவி செய்ய முயற்சிக்கும் தனிநபர்கள் மீது பொதுமக்கள் தங்கள் விரக்தியை காட்டுவதை அதிகாரம் பெற்றதாக உணர்கிறார்கள். அவை எதிர்க்கப்பட வேண்டும்." என்று ராயன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com