உலகப் பணக்காரர்கள் லிஸ்டில் டாப் 10-க்குப் போட்டியிடும் இந்தியப் பணக்காரர்கள்!

யோகா நிபுணர் பாபா ராம்தேவின் ஆர்கானிக் நுகர்பொருள் நிறுவனமான பதஞ்சலியின் தலைவரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் டி- மார்ட் நிறுவனரான ராதாகிருஷ்ணன் தாமனி இருவரும்
உலகப் பணக்காரர்கள் லிஸ்டில் டாப் 10-க்குப் போட்டியிடும் இந்தியப் பணக்காரர்கள்!

யோகா நிபுணர் பாபா ராம்தேவின் ஆர்கானிக் நுகர்பொருள் நிறுவனமான பதஞ்சலியின் தலைவரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் டி- மார்ட் நிறுவனரான ராதாகிருஷ்ணன் தாமனி இருவரும் ஹூரூன் வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியுடன் தங்களது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு பங்குச் சந்தையில் வீசிய ஒரு பேரலையில் ரிலையன்ஸ் பங்குகள் அதிகபட்சமாக 58 சதவிகிதம் அதிகரித்து ரூ 2.57 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலமாக ரிலையன்ஸ் அம்பானி தொடர்ந்து ஆறாவது முறையாக இந்தியப் பணக்காரர்களில் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் ஹூருன் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்களுக்கான பட்டியலிலும் முதல் 15 இடங்களில் ஓரிடத்தைப் பெற்றுவிட்டார்.

முகேஷ் அம்பானியிடம் உள்ள செல்வம், ஏமன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி லாபத்தைக் காட்டிலும் 50 சதவிகிதம் அதிகமாக உள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ஆச்சார்யா பாலகிருஷ்ணா, பாபா ராம் தேவின் பால்ய நண்பர்... பாபா ராம்தேவால் பதஞ்சலிக்கு கிடைத்த பிரபல்யத்தின் மூலமாக, இப்போது ஆச்சார்யா பாலகிருஷ்ணா இந்தியாவிலுள்ள 10 பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

அவர் மட்டுமல்ல, டி.மார்ட் எனும் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் அதிபரான ராதாகிருஷ்ணன் தாமனியும்கூட முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு தமது தொழில் முன்னேற்றத்தில் 320 சதவிகிதம் வளர்ச்சி விகிதம் காட்டி டாப் டென் இந்தியப் பணக்காரர்களில் ஒருவர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். இப்படியாக இந்த ஆண்டு ஹூரூன் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் லிஸ்டில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களையும் சேர்த்து மொத்தம் 8 புதியவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டில் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 25 ஆவது  இடத்திலிருந்த பாலகிருஷ்ணா, தனது வருமானத்தை 173 சதவிகிதம் உயர்த்தி 8 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரது நிகர லாபம் 70,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பத்தாவது காலாண்டில் 10,561 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ள பதஞ்சலி நிறுவனம், உலகின் பிரபலமான இதர பிராண்டுகளுடன் லாப விகிதத்தில் மிக நெருக்கமாகப் போட்டியிடுகிறது. அவென்யூ சூப்பர்மார்ட் நிறுவனங்களின் இயக்குனரான 62 வயது தாமனி ராதாகிருஷ்ணனின் இந்த ஆண்டுக்கான நிகர லாபம், கடந்த ஆண்டைவிட மிக உயர்ந்து 321 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அவரை அடுத்து அனுரங் ஜெயின் குடும்பத்தின் என்டியூரன்ஸ் டெக் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 286 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

மேற்கண்டவர்களின் வருவாய் மற்றும் லாபக் கணக்கீடு ஜூலை மதம் 31 ஆம் தேதி டாலரின் மதிப்பு 64.1 ரூபாயாக இருந்ததின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அது மட்டுமல்ல, மீடியா.நெட்டின் 34 வயது திவ்யங் துராக்கியா, பின்புலமல்லாமல் தானே உருவான சுய லட்சாதிபதிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னைப் போலவே 40 வயதுக்குட்பட்ட மேலும் 5 சுய தொழில்வல்லுநர்களுடன் இணைந்து  புதிய தொழில்நுட்பத் தொழில்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவர்களோடு பெங்களூரைச் சேர்ந்த அம்பிகா சுப்ரமண்யன் எனும் 42 வயது பெண்மணியும் சுய தொழில் வல்லுநர்களில் ஒருவராகி இந்தியப் பணக்காரர்கள் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் மொத்தம் 51 பெண்கள் உள்ளனர். 2013 ஆம் ஆண்டு முதல், உலகப் பணக்காரர் பட்டியலில் இருந்த 100 பேருடைய சொத்து மதிப்பு அப்படியே இருமடங்காகி, வருவாய் மதிப்பு 8, 400 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 136 பில்லியனர்கள் உள்ளனர். 2012 ஆம் ஆண்டில் ஹூரூன் பணக்காரர்கள் பட்டியல் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த சாதனை பதிவாகியுள்ளது.

ஹூரூன் பணக்காரர்கள் பட்டியலின்படி இந்த ஆண்டு, மும்பை மாநகர் 181 தனிப் பணக்காரர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. மும்பையைத் தொடர்ந்து புதுடில்லி 117 பணக்காரர்களுடனும், பெங்களூரு 51 பணக்காரர்களுடனும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கின்றன. 26 புதிய பணக்காரர்களுடன் அஹமதாபாத் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்திருக்கிறது. மேலும் 22 மற்றும் 11 புதிய பணக்காரர்களுடன் சென்னை மற்றும் கான்பூர் நகரங்கள், இந்தப் பட்டியலில் டாப் டென் லிஸ்டுக்குள் முதன்முறையாக நுழைந்திருக்கின்றன. இந்த வருடப் பட்டியலில் இவற்றைச் சேர்த்து மொத்தம் 18 புதிய நகரங்கள் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.

இதில் மேலுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 3 புதிய பணக்காரர்களுடன் உதய்பூர், 2 புதிய பணக்காரர்களுடன் வதோதரா, மற்றும் ஆளுக்குத் தலா ஒரு புதுப்பணக்காரர்களுடன் காஞ்சிபுரம் மற்றும் ஃபரீதாபாத் நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com