சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: தீர்ப்பின் முக்கியம்சங்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: தீர்ப்பின் முக்கியம்சங்கள்


புது தில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.

தீர்ப்பின் முக்கியம்சங்கள் : 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிபதி கன்வில்கருடன் இணைந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை ஏற்பதாக  நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் அறிவித்தனர்.

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் காட்டக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்.

சபரிமலை கோயிலில் பெண்களுக்கு தடை விதிப்பது சட்டவிரோதம். அரசியல சாசனத்துக்கு எதிரானது.

5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்புக் கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு நீண்ட காலமாகவே பாகுபாடு காட்டப்படுகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்க வேண்டும்.

பெண்களை தெய்வமாக வழிபடும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாகக் கருதக் கூடாது.

மேலும் படிக்க: சபரிமலை வழக்கு: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட தீர்ப்பு என்ன?

உடல், உளவியல் ரீதியை காரணம் காட்டி பெண்களை சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதில் பாகுபாடு காட்டக் கூடாது.

வழிபாடு என்பது அனைவருக்கும் உள்ள சம உரிமை.

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு நீண்ட நாட்களாக பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com