குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் இந்த கோயில்களில் ஆண்கள் நுழைய முடியாது தெரியுமா? 

சபரிமலைக்குப் பெண்கள் செல்வது குறித்து உலகமே ஊற்று நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருந்த தீர்ப்பு இன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் இந்த கோயில்களில் ஆண்கள் நுழைய முடியாது தெரியுமா? 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அதில் 11 வயது முதல் 50 வயதுள்ள அனைத்துப் பெண்களும் பாகுபாடின்றி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க: சபரிமலை வழக்கு: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட தீர்ப்பு என்ன?

இந்த நாளில், இந்தியாவில் ஆண்கள் நுழைவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும் கோயில்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா?

குறிப்பிட்ட சில கோயில்களில் ஒரு சில நாட்கள் மட்டும் ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோயில்களின் பட்டியலை தற்போது காணலாம். 
 

1. புகழ்பெற்ற காமாக்யா கோயில் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் அமைந்துள்ளது. சக்தி பீடங்கள் 51ல் இந்த காமாக்யா பீடம் முதல் தலமாகும். இந்தக் கோயிலின் கருவறையில் இருக்கும் யோனி வடிவமே இங்கு சக்தியாக வழிபடப்படுகிறது. இங்கு மாதத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தேவி மாதவிலக்காகி இருக்கும் நாட்களாகக் கருதப்பட்டு கோயிலுக்குள் ஆண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

2. படைக்கும் கடவுளெனப் போற்றப்படும் பிரம்மாவுக்கென்று தனிக் கோயில்கள் மிகச் சிலவே இந்தியாவில் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் மாவட்டம் புஷ்கர் பிரம்மா கோயில். இக்கோயிலில் திருமணமான ஆண்கள் வந்து வழிபட்டால் தோஷம் ஏற்படும் என்று கூறி, திருமணமான ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இங்குப் பூஜை செய்யும் பூசாரிகள் அனைவரும் பிரம்மச்சாரிகள் என்றும் சொல்லப்படுகிறது. 

3. கன்னியாகுமரியில் புகழ்பெற்ற குமாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அன்னை துர்க்கை கோயில் கொண்டுள்ளாள். இந்தக் கோயிலில் நுழைவாயில் வரை மட்டுமே ஆண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 

திருமணமான ஆண்கள் கோயில் உள்ளே அனுமதிப்பதில்லையாம். ஏனென்றால், சிவபெருமானைத் தனது கணவராகப் பெறுவதற்காக அன்னை பார்வதி தியானம் செய்த இடமாகக் கருதப்படுகிறது. எனவே, அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டுள்ளதால் அக்கோயிலில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 

மேலும் அறிய: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: தீர்ப்பின் முக்கியம்சங்கள்

4. பீகாரில் முஷாபர்பூரில் உள்ள அம்மன் கோயிலிலும் மாதத்தில் ஒரு சில நாட்கள்  ஆண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்னையின் மாதவிடாய் காலத்தில் ஆண் பூசாரியை கூட அந்தக் கோயில் நிர்வாகம் கருவறைக்குள் அனுமதிப்பதில்லையாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com