பெண்ணின் விருப்பத்தோடு நடைபெற்ற திருமணம் ‘லவ் ஜிகாத்’ அல்ல! - உச்சநீதிமன்றத்தில் கேரள முஸ்லீம் இளைஞர் கேள்வி!

‘மத மாற்றம் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இளம்பெண்களை மூளச் சலவை செய்து முஸ்லீம் இளைஞர்கள் நடத்தும் இது போன்ற லவ் ஜிகாத் திருமணங்கள் செல்லாது என்றும் பெண்ணின் மீது அவரது பெற்றோர்களுக்குத் தான் 
பெண்ணின் விருப்பத்தோடு நடைபெற்ற திருமணம் ‘லவ் ஜிகாத்’ அல்ல! - உச்சநீதிமன்றத்தில் கேரள முஸ்லீம் இளைஞர் கேள்வி!

கேரளாவைச் சேர்ந்த ஜஹான் என்ற இளைஞர் கடந்த வருடம் ஒரு இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப்பெண்ணை ஜஹான் சந்தித்தது... அந்தப் பெண்ணே தன் முழு விருப்பத்தோடு வெளியிட்டிருந்த ஒரு திருமணப் தகவல் பதிவின் அடிப்படையில் மட்டுமே. இந்துப் பெண் வெளியிட்டிருந்த திருமணத் தகவல்கள் தனக்கு ஒத்துப் போகவே ஜஹான் தன் பெற்றோர்களுடன் அந்தப் பெண்ணைச் சென்று பார்க்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கின்றனர். ஆனால் பெற்றோருக்கு ஒரே மகளான அந்தப் பெண்ணின் வீட்டினர் இந்த கலப்புமத மணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால்... அப்பெண்ணின் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் வேறொரு நபரை தந்தை ஸ்தானத்தில் வைத்து இஸ்லாமிய வழக்கப் படி நிக்ஹா நடத்தப்பட்டது. ஆனால் இஸ்லாமிய வழக்கப் படி... பெண்ணின் குருதித் தந்தை இல்லாமல் நடத்தி வைக்கப்படும் நிக்ஹா செல்லாது என்பது இஸ்லாமிய திருமண விதிமுறைகளில் ஒன்று.

எனவே திருமணம் ஆன சில நாட்களிலேயே, அந்தப் பெண்ணின் பெற்றோர் சார்பாக இந்தத் திருமணத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. வேறு குழந்தைகள் இல்லாத பட்சத்தில் இந்தப் பெண்ணுக்கு தனது பெற்றோரைப் பராமரிக்கும் கடமை இருப்பதாலும், பெற்றோருக்கு ஒரே ஒரு வாரிசாக அந்தப் பெண் இருந்தமையாலும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம்; பெண்ணின் தகப்பனார் இல்லாது, பெற்றோர் அனுமதியைப் புறக்கணித்து தான் தோன்றித் தனமாக நடத்தப் பட்ட அந்தத் திருமணம் செல்லாது என அறிவித்தது.

அதுமட்டுமல்லாமல் ‘மத மாற்றம் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இளம்பெண்களை மூளச் சலவை செய்து முஸ்லீம் இளைஞர்கள் நடத்தும் இது போன்ற லவ் ஜிகாத் திருமணங்கள் செல்லாது என்றும் பெண்ணின் மீது அவரது பெற்றோர்களுக்குத் தான் முழு உரிமை எனத் தீர்ப்பளித்து வழக்கை முடித்தது.

கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாத ஜஹான்... தன் மனைவியான அந்தப் பெண்ணை காணவில்லை என்றும், கண்டுபிடித்துத் தருமாறூம் கூறி ஹேபியஸ் கார்பஸ்’ மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததோடு மட்டுமல்லாமல்; இந்தத் திருமணம் அந்தப் பெண்ணின் முழு சம்மதத்தின் பேரில் தான் நடைபெற்றது... பிறகு இதை எப்படி லவ் ஜிகாத் என்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அது மட்டுமல்ல தன்னிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்லப் பட்ட தனது மனைவியான அந்தப் பெண்ணை இந்த வழக்கில் சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும்.அந்தப் பெண்ணுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமுண்டா? இல்லையா? என்பதைப் பற்றி அப்போது தெரிந்து கொள்ளலாம். என்றும் ஜஹான் தன் வாதத்தை முன் வைத்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் இவ்விசயத்தில் அளித்த தவறான தீர்ப்புக்கு தடை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Image courtsy: google.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com