சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படம் மூலம் பாஜக தலைவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது!

அமைச்சர் இத்தகைய பலாத்காரச் செயலில் ஈடுபட்டார் என்பதற்கு பேருந்தில் இருந்த பிற பயணிகள் சாட்சியம் அளித்துள்ளனர். அவ்வகையில் சமூக ஊடகத்தில் பகிரப் பட்ட புகைப்படம் ஆவணமாகி
சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படம் மூலம் பாஜக தலைவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ரவீந்திர பவன்தடே, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி, தான் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்தில் செய்துள்ள அராஜகமான காரியமொன்று புகைப்பட ஆவணத்துடன் சமூக ஊடகங்களில் பலமுறை பகிரப்பட்டு அதன் மூலம் அவருக்கு தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளது.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி தனது பேருந்துப் பயணத்தின் போது ரவீந்திர பவன் தடே தன்னருகில் அமர்ந்திருந்தவரான சக பெண் பயணி ஒருவரை வலிந்து முத்தமிட்டு பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் புகைப்படமாகி சமூக ஊடகங்களில் பயணிக்கத் தொடங்கியது. இந்தப் புகைப்படத்தைக் கண்ட பலதரப்பட்ட மக்களும் அமைச்சரின் இந்த அராஜகச் செயல் கண்டு கொதித்தெழுந்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யத் தொடங்க, தற்போது ரவீந்திரா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் இத்தகைய பலாத்காரச் செயலில் ஈடுபட்டார் என்பதற்கு பேருந்தில் இருந்த பிற பயணிகள் சாட்சியம் அளித்துள்ளனர். அவ்வகையில் சமூக ஊடகத்தில் பகிரப் பட்ட புகைப்படம் ஆவணமாகி தவறு செய்த பாஜக தலைவருக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளமை பாராட்டப் பட வேண்டிய விசயமே!

Image courtsy: NDTV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com